பெத்திலிட் புழுப்பருவ ஒட்டுண்ணி :
கோணியோசஸ் என்ற பெத்திலிட் குளவியினத்தைச் சார்ந்த ஒரு புழுப்பருவ புற ஒட்டுண்ணியாகும். இது தென்னைக் கருந்தலைப்புழுவை மகவும் திறமையாக அழிக்கும் தன்மை கொண்டது.
பெத்திலிட் ஒட்டுண்ணிகள் வளர்க்கும் முறை:
- இந்த ஒட்டுண்ணி கருமை நிறத்தில் பளபளப்பாக உடல் பகுதி கூர்மையாகவும் சிறு எறும்பு போன்றும் இருக்கும். தாக்கப்பட்ட ஒரு புழுவிலிருந்து 13 லிருந்து 19 ஒட்டுண்ணிகள் வரை வளர்ச்சியடையக்கூடும்.
- ஒரு 1.5x2.5 செ.மீ. கண்ணாடிச் சோதனைக்குழாயில் ஒட்டுண்ணிகளை ஒரு நாள் இனச்சேர்க்கைக்கு விட வேண்டும். மறுநாள் பெண் ஒட்டுண்ணிகளை தனித்தனியாக சிறு கண்ணாடிக்குழாய்களில் அல்லது கண்ணாடிக்குப்பிகளில் பிரித்து வைக்க வேண்டும்.
|